எம் கலைகளுக்கான ரசிகர்கள் எம்மிடமே உண்டா ? (june editorial )

நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் கலைகளை நாங்களே மதிக்கவில்லை .எங்கள் கலைகளுக்கு எங்களிடமே  ரசிகர்கள் இல்லை . என்பதுதான் உண்மை . எங்கள் பிள்ளைகளை கலை வகுப்புகளுக்கு அனுப்புவதும் ,பெரும்  பணத்தை செலவிடுவதும் ஒரு பொழுது போக்காகவும் ,உடற்பயிட்சியாகவும்  அமைத்துள்ளதே தவிர , ஒருவரும் அக்கலைக்கு எம் சமூகத்தில் எதிர் காலம் இருக்கா ? எமது கலைக்கான அல்லது எமது பிள்ளைகளுக்கான  ரசிகர்கள் உள்ளார்களா ? அல்லது எவ்வாறு எங்கள் கலைகளுக்கு ரசிகர்களை ஏற்படுத்துவது என்பது பற்றி எந்த ஒரு ஆய்வும் இதுவரை மேற்கொள்ளவில்லை .

உள்ளூர் கலைஞர்களை கொண்டு நிகழ்வு நடத்துபவர்களின் முகத்துக்காக நுழைவு சீட்டு வாங்கபவர்களும் , இலவசமாக நிகழ்வு நடத்துபவர்களும்  போலியான ரசிகர்களை மட்டும் ஏற்படுத்தியிருக்கின்றது

தென்னிந்திய தொலைக் காட்சிகள் எங்களை வைத்து வியாபாரம் செய்கின்றன என்று பொங்கி எழ மட்டும் முடிகின்றது.

முதலில்  எங்களை நாங்கள் கண்டுகொண்டோமா என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும்.

கனடாவில் ஐபிசி தமிழாவை வெற்றி பெறச் செய்வதற்கு நடக்கும் போராட்டமே இதற்கு சான்றாகும்.

முற்று முழுதாக எமது கலைஞர்கள் 1000 பேர வரை கலந்து கொள்ளும் ஒரு பிரம்மாண்ட நிகழ்சிக்கு  கனடாவில் வாழும் தமிழர் தொகையில் 5 சதவீதத்தை கொண்டு வருவதற்கு படும் பாடுகள் சொல்லில் அடங்காதவை.

இதுவே இந்தியக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் கலை நிகழ்வாக இருந்தால் அனுமதிச் சீட்டுக்கள் எப்போதோ விற்றுத் தீர்ந்திருக்கும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

எமக்கான மேடை எங்கே எமக்கான வாய்புகள் எங்கே என்று கேள்விக்கணை தொடுக்கின்றவர்களும் கூட இப்போது காணமல் போய்விட்டார்கள்..

ஐ.பி.சி தமிழ் போல் பலமில்லியன் செலவு செய்து பாடம் கற்றுக் கொள்வதற்கு இங்கு யாரும் இல்லை இருந்தாலும் இனி வரமாட்டார்கள் என்பதே உண்மை.

இனியாவது நாம் எங்களை சுயபரிசோதனை  செய்து கொண்டு எமது அணுகு முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.

எமக்கான கலைப்படைப்புகளை தருவதற்கு எமக்கான கலைஞர்களும் அவர்களுக்கான கலா ரசிகர்களும்  முதலில் நாம் உருவாக்கவேண்டும் வேண்டும்.

ஐபிசி பாஸ்கரன்

தனிமனிதனாக தான் உழைத்த கோடிகணக்கான சொத்துக்களையும் , ஈழ தமிழர் ஊடகம் ஒன்று அமையவேண்டும் என்றதற்க்காக பெரு நம்பிக்கையோடு  செலவு செய்து கொண்டிருப்பவர் .

அதுமட்டுமல்ல தாயகத்தில் போரால் பாதிக்கப்பட முன்னாள் போராளிகளுக்கும் , மக்களுக்கும் தொழிவாய்ப்புகளையும் , பொருளாதார மேம்பாட்டுக்காகவும் பல மனிதாபிமான பணிகளை போரின் பின்னர் தொடர்ச்சியாக செய்து வருகின்றார் . இதற்காக பல இலட்சம் டொலர்களை வழங்கிவருகின்றார் .

எவ்வளவு இருந்தாலும் கொடுப்பதற்கு மனமிருக்கவேண்டும். போர் திண்ட பூமி எங்ககளிடம் அதையே எதிர்பார்கின்றது இப்படியாக எனது துறை சார்ந்த ஒருவரை இன்னும் நான் வாழ்நாளில் பார்க்கவில்லை . எங்ககளிடமும் ஒருவரும் இல்லை . பாஸ்கரனின் பல மனிதாபிமான வாழ்வாதார பணிகளை நேரில் பார்த்திருக்கின்றேன்,

எங்கள் கலைஞர்களுக்கு ரசிகர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை ,

இகுருவிக்கோ அல்லது இங்குள்ள  எங்கள் ஊடகங்களுக்கோ போட்டி ஊடகம்  என்று நாம் ஒரு சிறு வட்டத்தில் நிக்காமல்

ஒரு தனிமனிதனாக எம் சமூகத்தை திரும்பி பார்க்கிறார் என்பதற்க்காக… .

பாஸ்கரனுக்காக…அவரது நம்பிக்கைக்காக

நாங்கள் இந்நிகழ்வுக்கு ஆதரவு  கொடுப்போம்.
அன்புடன்
நவஜீவன் அனந்தராஜ்