உயர் தரத்தில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வி

உயர் தரத்தில் சித்தியடையும் அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மினுவங்கொடை நகரில் நேற்று (12) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கம்பஹா மாவட்டத்தை புத்திஜீவிகளின் கேந்திர நிலைமாக மாற்ற வேண்டும்.

களனி பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் பீடம் உள்ளிட்ட பீடங்களை நாம் கொண்டு வர வேண்டும்.

தற்போது இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் உயர்தரத்தில் சித்தியடைகின்றனர்.

எனினும், 30 ஆயிரம் பேர் மாத்திரமே பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படுகின்றனர்.

இந்த நிலைமை சிறந்தது அல்ல. இந்த நிலைமையை மாற்றுவதற்காக பாரிய முதலீட்டினை மேற்கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்வியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.