பாதுகாப்பான தேசத்தை வழங்கும் திறன் எனக்கு இருக்கின்றது

நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான நடைமுறை வேலைத்திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தரணியாகல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டிற்காக சேவையாற்றி ஒருவராக தான் களமிறங்குவதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் பாதுகாப்பான தேசத்தை வழங்கும் திறன் தனக்கு இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.