லோகன் கணபதி ஒரு பச்சை பொய்யரா ?

லோகன் கணபதி ஒரு பச்சை பொய்யரா ?

‘தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.’ என்றார் வள்ளுவர் இதன் பொருள்
ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக் குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும் என்பதாகும்.

கடந்த வாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது ஒன்ராறியோ மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி சொன்ன பொய்.
கடந்த நொவெம்பர் மாதம் 3ம் திகதி கனடாவின் இந்து நாகரீக அருங்காட்சியகம் ஏற்பாடு செய்த இந்து பாரம்பரிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய அரசியல் வாதியான சுப்பிரமணியம் சுவாமி அவர்கள் கனடாவிற்கு வருகை தந்திருந்தார்.
தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீது கடுமையான எதிர்பினை வெளிப்படுத்தி வருபவர் என்ற வகையிலும் இலங்கையின் முன்ளா் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ள ஒருவர் என்ற வகையிலும் இவருடைய வருகை குறித்து தமிழ் சமூகம் அதிருப்தி கொண்டிருந்தது.
அவர் டொரோண்டோ வரும் போது தமிழர்கள் விமான நிலையம் அருகே பாதைகளுடன் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள்

இந்

த மாநாட்டில் கலந்து கொண்ட மாகாண சபை உறுப்பினர் திரு.லோகன் கணபதி அவர்கள் சுப்பிரமணியம் சுவாமிக்கு அருகில் இருப்பது போன்ற புகைப்படங்களும் அது தொடர்பான விமர்சனங்களும் சமூக வலைத் தளங்களிலும் சில ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் தன்னை தெரிவு செய்த மக்களின் அழைப்பினை ஏற்று ஒரு நிகழ்வில் கலந்து கொள்வதை எவரும் கேள்விக்கு உட்படுத்த முடியாது என்பதை நாம் உறுதியாக நம்புகின்றோம்.

 

எனினும் இந்த விமர்சனங்களுக்கு பதிலளிப்பதாக எண்ணி மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் ஒரு காணொளிப் பதிவினை , கனேடிய மற்றும் ஒன்ராறியோ கொடிகளுக்கு முன்னாள் இருந்தவாறு தனது முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தார்.

அந்த காணெளியில்

தான் அந்த மாநாட்டில் கலந்து கொண்டது உண்மை என்றும் எனினும் அங்கு கலந்து கொண்ட சுப்பிரமணியம் சுவாமியை தான் சந்திக்கவில்லை என்றும் அவருடன் கதைக்கவோ புகைப்படம் எடுக்கவோ இல்லை என்றும் திரு.லோகன் கணபதி அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டிருந்தார்.

 

தன் மீத திட்ட

முதலில் வெளியான புகைப்படங்கள்

மிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் அவதூறுப் பிரசாரங்களின் தொடர்ச்சியாகவே இந்த புகைப்படம் சிலரால் பகிரப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

இதை தொடர்ந்து அந்த காணொளியை ஊடகங்கள் பகிர்ந்திருந்தன , அதுமடடுமின்றி CMR வானொளியிலும் தனது கருத்தை வலிந்து தெரிவித்திருந்தார் . ” தான் அவரை சந்திக்கவே இல்லை , திட்டமிட்ட அவதூரு என்று தெரிவித்திருந்தார் .

அவருடைய காணொளியை அவருக்கு நெருக்கமான சிலரும் தமது முகநூல் தளங்களில் பகிர்ந்து திரு.லோகன் கணபதி மீது அவதூறு செய்பவர்களை கடுமையாக சாடி தமது கருத்துக்களையும் முன்வைத்திருந்தனர். அப்புகைப்படங்கள் இரண்டும் போட்டோஷாப் முலம் செய்யப்பட்டது என்று எல்லாரையும் நம்பவைக்கப்பட்டது .

எனினும் மீண்டும் ஒரு மாதம் கடந்த பின்னர், அந்த மாநாட்டில் திரு.லோகன் கணபதி அவர்கள் சுப்பிரமணியம் சுவாமியை சந்திப்பதற்கு கால் கடுக்க காத்திருந்த காட்சிகளும் அமர்ந்திருக்கும் சுப்பிரமணியம் சுவாமிக்கு பின்னால் நின்று கை கொடுத்து அவரின் முதுகில் தட்டிக் கொடுக்கும் காட்சிகளும் காணொளியாக வெளியிடப்பட்டிருந்தது.

இந்த காட்சிகளில் மகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் வெளிப்படுத்திய உடல்மொழி என்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
மறுபுறம் சுப்பிரமணியம் சுவாமியை சந்தித்ததை ஏன் அவர் மறுக்க வேண்டும் என்றும் எதற்கான அவர் பொய் கூறினார் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஒரு மக்கள் பிரதிநிதியாக வெளிநாட்டு அரசியல்வாதி ஒருவரை சந்திப்பதில் தவறேதும் இல்லை. அவ்வாறு சந்திப்பு ஒன்று நடந்து , அவருடன் கைகொடுத்து பேசிய பின்னர் அவரை சந்திக்கவில்லை என்றும் அவருடன் பேசவில்லை என்றும் கனேடிய மற்றும் ஒன்ராறியோ கொடிகளுக்கு முன்னாள் இருந்தவாறு காணொளியை வெளியிடுவது , மக்களை ஏமாற்றும் ஒரு தந்திரோபாயமாகவே கருதப்படுகின்றது. அவர் மீதான கடந்தகால நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாகியுள்ளது .

சுப்பிரமணியம் சுவாமியை சந்திப்பது தவறு என்று மாகாண சபை உறுப்பினர் கருதினால் ஏற்பாட்டாளர்களுக்கு தனது நிலைப்பாட்டை தெளிவு படுத்தி விட்டு அந்த மாநாட்டில் கலந்த கொள்வதை தவிர்த்திருக்கலாம்.

அதனையும் தாண்டி அந்த சந்திப்பில் கலந்து கொண்டு சுப்பிரமணிய
சுவாமியை சந்தித்து அவருக்கு கைகொடுத்து கலந்துரையாடி விட்டு அவரை சந்திக்கவே இல்லை என்று ‘பச்சைப் பொய்’ சொல்வது அவரை மட்டுமல்ல அவர் சொன்ன பொய்யை உண்மை என்று நம்பி அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவருக்கும் மிகப்பெரிய அசௌகரியத்தை ஏற்படுத்தி விட்டுள்ளது.

கனேடிய தேசியக் கொடியின் முன்னா் அமர்ந்திருந்தவாறு அவர் இந்த பச்சைப் பொய்யை சொல்லியிருக்கின்றார். இதற்காக அவர் பதிவியை விட்டு இராஜினாமா செய்யவேண்டும் ? அல்லது பகிரங்கமாக மன்னிப்பு கேட்க்கவேண்டும் .
இதற்காக ஒன்ராறியோ அரசு என்ன பதிலை சொல்லப்போகின்றது ?

மாகாண சபை உறப்பினராக பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளும் போது பின்வரும் வாசகங்களை அவர் உரத்துச் சொல்லியிருப்பார்.

” I, do solemnly, sincerely and truly affirm and declare the taking of an oath is according to my religious belief unlawful, and I do also solemnly, sincerely and truly affirm and declare that I will be faithful and bear true allegiance to Her Majesty Queen Elizabeth.

லோகன் கணபதி தான் சுப்ரமணிய சுவாமியை சந்திக்கவில்லை என்று கூறிய காணொளி

 

 இப்போது வெளியான திரு லோகன் கணபதி அவர்கள் சுப்பிரமணியம் சுவாமி அவர்களை சந்தித்து கை கொடுக்கும் காணொளி