நிறைவேற்‍று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட கூடாது

13 அவது அரசியல் அமைப்பு திருத்தத்தில் சொல்லப்பட்டுள்ள நிறைவேற்‍று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட கூடாது என பெப்பியான பிரிவேனாவின் விகாராதிபதி கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டால் அது நாடு இரண்டாக பிளவுப்பட வழிவகுக்கும் எனவும் தேரர் கூறியுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆசி வேண்டி நேற்று (09) மாலை இடம்பெற்ற சமய நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.