ஶ்ரீலசுக விற்கு பொதுஜன பெரமுன வழங்கியுள்ள வாக்குறுதி

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விருப்பம் இல்லாமல் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது இல்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரு கட்சிகளுக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்மாத இறுதிக்குள் ஒரு முடிவிற்கு வர எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.