எதிர்ப்பார்த்தவாறே நடந்தது – மஹிந்த ராஜபக்ஷ

எல்பிட்டிய தேர்தலில் பொதுமக்கள் பெற்றுக் கொடுத்த முடிவுகள்தான் ஜனாதிபதி தேர்தலிலும் கிடைக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருணாகலை, தம்பதெனிய பிரதேசத்தில் நேற்று (11) இரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்தார்.

எதிர்ப்பார்த்த வகையில் எல்பிட்டிய தேர்தலில் வெற்றிப் பெற ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு முடிந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.