கிடைத்துள்ள இறுதி வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

நாட்டை பாதுகாக்க நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ள இறுதி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டை காட்டிக் கொடுப்பதற்கு இதற்கு மேலும் வாய்ப்பளிக்க கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தனது தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், சஜித் பிரேமதாச அவருக்கு உள்ள ´திரு´வாய் தொடர்பில் இத்தினங்களில் பேசி வருவதாக தெரிவித்தார்.

அந்த வாயிலாவது நாட்டினை அபிவிருத்தி செய்யக்கூடிய விடயங்கள் வௌியானால் நல்லது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், எனினும் கடந்த காலப்பகுதியில் நாடு விற்கப்படும் போது அவரது ´திரு´வாயால் எவையும் வௌியாகவில்லை என தெரிவித்தார்.