மக்கள் விடுதலை முன்னணியினரின் ஆர்ப்பாட்டம் – வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

மக்கள் விடுதலை முன்னணியினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக டெக்னிகள் சந்தி முதல் ஓல்கொட் மாவத்தை வரையிலான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அப்பகுதியில் இருந்து புறக்கோட்டை பகுதியை நோக்கி செல்வதாகவும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அரசாங்கத்திற்கு தமது எதிர்பை வௌிப்படுத்தியே இவ் ஆர்ப்பாட்டம் மக்கள் விடுதலை முன்னணியினரால் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் காணப்படுவதாக செய்தியாளர்கள் கூறினார்கள்.