அரசாங்க தொழிற்துறையை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம்

அரசாங்கத்துக்குட்பட்ட 10 நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக அமைச்சின் செயலாளர்களுக்கும் இந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கிடையில் இணக்கப்பாட்டு உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

இந்த இணக்கப்பாட்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் நிகழ்வு நிதியமைச்சில், நிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

அரச பெருந்தோட்ட கூட்டுதாபனம் தேசிய கால்நடை அபிவிருத்தி சபை மில்கோ நிறுவனம் லங்கா சத்தோஷ உள்ளிட்ட 10 நிறுவனங்கள் தொடர்பிலேயே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளன.

அரசாங்கத்துக்குட்பட்ட இந்த நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் 2017 ஆம் ஆண்டில் அரச வர்த்தக திணைக்களத்தினால் இணக்கபாட்டு மேம்பாட்டு எண்ணக்கரு தொடர்பான விபரங்கள் முன்னேடுக்கப்பட்டுள்ளன. 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி 07 ஆம் திகதி இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த நிகழ்வில் அமைச்சர்களின் செயலாளர்கள் திறைசேரி செயலாளர்கள் அரச தொழிற்துறை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி திலக்கா ஜெயசுந்தர உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.