மட்டக்களப்பு சேலையும் புதியவெளிச்சம் பத்தாவது ஆண்டும் …

மட்டக்களப்பு சேலையும் புதியவெளிச்சம் பத்தாவது ஆண்டும் …

Part 1
* 💚💚 மட்டக்களப்பில் 2016/17இல் நடத்திய புதிய வெளிச்சத்திற்கு பின்னர் அங்கு சரியான தொடர்புகள் இல்லாததால் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு என்னால் எதுவும் செய்யமுடியவில்லை என்ற ஆதங்கம் இருந்து கொண்டே இருந்தது . ஆனாலும் அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களினால் இங்கு நடாத்தப்படும் “நமது சமூகம் ” (Our Society -Canada – USA ) என்ற அமைப்பின் வேலைத்திட்டத்தில் பெரு நம்பிக்கை வைத்திருந்தேன் , கடந்த நவம்பர் மாதம் அவர்கள் நடத்திய நிதி சேர் இரவு நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்த்தில் பெண்களை தலைமைத்துவமாக கொண்டவர்கள் மூலம் இயங்கும் OS WE Project மூலம் நெய்யப்பட்ட சேலைகள் (saree ),சாரங்களை இங்கு கொண்டுவரப்போவதாக கூறினார்கள் .உடனேயே நான் அவர்களுக்கு $500 டொலர்களை அன்பளிப்பாக அந்த முயற்சிக்கு கொடுத்து எனது ஆதரவை தெரிவித்தேன் . கீழே உள்ள படம் அந்த நிகழ்வில் அந்த அமைப்பின் செயற்குழுவால் நிகழ்த்தப்பட்ட மெலனி டேவிட் உற்பட “பேஷன் ஷோ” நிகழ்த்தி சுமார் 250 சேலை , சாரங்களை விற்று அங்குள்ள பெண்களின் தன்னிறைவு அடைய உதவினார்கள் , இந்நிகழ்வு சுமார் 500 பேருடன் வர்த்தக சம்மேளன , தமிழ் பேரவை தலைவர்கள் பங்குபற்றினார்கள். இப்பொழுதெல்லாம் நாம் ஒரு பேஷன் ஷோ கலாச்சாரத்துக்கும் செல்கின்றோமோ என்ற ஆதங்கம் இருந்தாலும் , எடுத்துக்கொண்ட முதல் முயற்சி பாராட்டக்கூடியது .

💚💚 2010 ஆம் ஆண்டிலிருந்து ஊள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்தல் , அவர்களுக்கான சந்தைவாய்ப்பை வழங்குதல் , புலம்பெயர் தமிழர்களின் அதன் மீதான முதலீடுகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகளில் எம் தாயகத்தில் பல செயற்பாடுகளை , விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தியுள்ளேன் . அதன் 2010 ,2011 களில் தீவிரமாக தொடங்கப்பட்டு பின்னர் தொடர்ச்சியாக இன்றுவரை புதியவெளிச்சமாக உருப்பெற்று கல்வி, பொருளாதாரம் , விவசாயம் என வளர்ந்து வருகின்றது .2009 இற்கு பின்னர் 12 தடவை எனது தாய் நாட்டிற்கு செல்வதன் மூலம் எழுத்தில் எழுதாத பல செயல்திட்டங்களுக்கு , பலரிடம் சிறு சிறு அளவில் உள்ளூர் உற்பத்தியில் முதலிடுவதற்கும், அங்கும் இங்குமாக ஒரு சிறு அணிலாகவேனும் இருப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது .
இவை எல்லாமே நிதி சம்பந்தப்பட்ட விடயம் என் 85% விதமானவை எனது உழைப்பிலும் . 15% நெருங்கிய நண்பர்களின் உதவியுடனும் நடத்திவருகின்றேன் (2009 இல் கனடா வந்த நான் 2010 youtube இல் ஏற்றப்பட்ட புதிய வெளிச்ச காணொளிகள் சில
💚
https://www.youtube.com/watch?v=k2sdAGM_SLo&t=279s
https://www.youtube.com/watch?v=RfpcHDfgr2Q&t=345s
https://www.youtube.com/watch?v=S84rHhWSEQc
https://www.youtube.com/watch?v=HIbTKdX5OeI
https://www.youtube.com/watch?v=ET6lp9bt8nc&t=99s

படம் 1 💚
மெலனி டேவிட்அவர்களின் தலைமையில் 2019 நவம்பர் மாதம் தாயக உற்பத்திகளை விற்பதற்க்காக நடத்தப்பட்ட பேஷன் ஷோ

நாளை தொடரும் …

Navajeevan Anantharaj.
Tel: 416-272-8543