பிரதமருக்கும் விசேட மருத்துவர்களுக்கும் இடையில் சந்திப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நாட்டில் உள்ள விசேட மருத்துவர்கள் சிலருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (09) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது வைத்திய துறையின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்காலத்தில் மக்களுக்காக முன்னெடுக்கப்பட கூடிய மருத்துவ வசதிகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும் விசேட மருத்துவர்கள் தமது தொழிலை முன்னெடுக்கும் போது எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான குறுகிய மற்றும் நீண்டகால தீர்வுகள் தொடர்பில் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன் போது பிரதமரின் செயலாளர் காமினி செனரத், நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.