ஜனாதிபதியும் பிரதமரும் இராஜினாமா செய்ய வேண்டும்

அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வர வேண்டும் என்றும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அண்மையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தீர்மானம் எடுப்பதில் தோல்வியடைந்துள்ளதை அவர்களே ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் நாமல் ரஜபக்ஷ கூறியுள்ளார்.

நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சி என்ற வசனத்தின் அர்த்தம் தெரியும் என்றால் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.