கொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1,797பேர் பாதிப்பு

கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆயிரத்து 797பேர் பாதிக்கப்பட்டதோடு, 6பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 58ஆயிரத்து 758பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 297பேர் உயிரிழந்துள்ளனர்.

14ஆயிரத்து 490பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 34ஆயிரத்து 971பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 110பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.