சமூகவலைதளத்தில் பரவிய தகவலால் காணாமல் போன பெண் கண்டுபிடிப்பு

கனடாவில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பெண்ணொருவர் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆர்யன் ஷபாசி என்ற 55 வயதான பெண்ணை கடந்த 29 ஆம் திகதி மாலை 6 மணி முதல் காணவில்லை என ரொறென்ரோ பொலிசார் சமூகவலை தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆர்யன் – எம்.ரி. பிலசன்ட் பாதை மற்றும் எர்க்கின் அவனியு பகுதிகளில் கடைசியாக காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் உயரம், உடல் எடை, காணாமல் போன அன்று அவர் அணிந்திருந்த உடைகள் குறித்த விபரங்களும் வெளியிட்டப்பட்டுள்ளன.

இந்த பதிவு சமூகவலைதளத்தில் பரவிய நிலையில் காணாமல் போயிருந்த ஆர்யன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் நேற்றுத் தெரிவித்தனர்.