கனடாவில் இருந்து சொந்த பிள்ளைகளையே கடத்திய ஓரினச் சேர்க்கை பெண் – விசாரணையில் பரபரப்பு தகவல்

ஓரினச் சேர்க்கை தாயார் ஒருவர் கனடாவில் இருந்து தமது பிள்ளைகள் இருவரை பிரித்தானியாவுக்கு கடத்திய சம்பவத்தின் பின்னணி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

கனடாவில் தனது மனைவி, பிள்ளைகள் இருவரை இரகசியமாக கடத்தியதாக கணவனால் முறையிடப்பட்ட ஓரினச் சேர்க்கை தாயார் விவகாரத்தில் கனேடிய அதிகாரிகள் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியிருந்தனர்.

இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவரை கடந்த ஜூலை மாதம் பொலிஸார் கைது செய்தனர்.

தமது 3 மற்றும் 4 வயதுப் பிள்ளைகளை, பெற்றோரான 67 வயது பிரையன் மற்றும் ஏஞ்சலா ஆகியோரின் துணையுடன் பிரித்தானியாவுக்கு கடத்திய விவகாரத்திலேயே 33 வயதான லோரன் எட்செல்ஸ் என்ற ஓரினைச் சேர்க்கை தாயார் கைதாகியுள்ளார்.

பிரித்தானியாவுக்கு சொந்த பிள்ளைகளைக் கடத்துவதற்காக லோரன் எட்செல்ஸ் குடும்பமானது சுமார் 2 ஆண்டு காலம் தீவிரமாக திட்டமிட்டுள்ளது.

இவர்களின் திட்டத்தை செயற்படுத்த பிரித்தானியாவுக்கும் பிரான்ஸ் நாட்டுக்கும் இடையே அமைந்துள்ள Jersey தீவை பயன்படுத்தியதுடன், மூன்று நாட்கள் இந்த தீவில் தங்கியிருந்து சாதக பாதகங்களை கண்காணிக்கவும் செய்துள்ளனர்.

பின்னர் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டங்களுடன் 13 அடி இறப்பர் படகில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

சுமார் இரண்டரை ஆண்டு காலம் ஸ்பெயினில் வசித்துவந்த இவர்கள் தங்களது திட்டத்தை செயற்படுத்த பிரான்ஸ் நாட்டுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

குழந்தைகளைக் கடத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக லோரன் எட்செல்ஸ் தமது பெயரை உத்தியோகபூர்வமாக மாற்றியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.