இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை – சுற்றுசூழல் திணைக்களம்

கடும் புயல் தாக்கத்திற்கு பின்னர் கல்கரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் நேற்று (சனிக்கிழமை) கடுமையான புயல் தாக்கியிருந்தது இந்நிலையில் கனேடிய சுற்றுசூழல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அந்தவகையில் மாலை 6 மணி முதல் புயல்கள் வலுவான காற்று வீசும் என்றும் இதன்பின்னர் கடும் மழை பெய்யும் என்றும் அத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

அத்தோடு தெற்கு ஆல்பேர்ட்டா முழுவதும் இடியுடன் கூடிய புயல் உருவாகும் என்றும் இது மாலை நேரங்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே முன்னர் விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை நேரத்தை 1 மணித்தியாலங்களுக்கு மேலும் நீடிப்பதாக அதாவது இரவு 7:30 முதல் 8:30 மணிவரை நீடிப்பதாக திணைக்களம் அறிவித்துள்ளது.