கொவிட்-19: கடந்த 24 மணித்தியாலத்தில் 267பேர் பாதிப்பு

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 267பேர் பாதிப்படைந்ததோடு, 26பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 20ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 6 ஆயிரத்து 434ஆக உயர்ந்துள்ளது. மேலும், 8 ஆயிரத்து 737பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 27,450பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 70,247பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,151பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.