குளிர்கால வீதி பராமரிப்பை மேம்படுத்த அழைப்பு

வடக்கு ஒன்றாரியோ நெடுஞ்சாலைகள் 11 மற்றும் 17இல், குளிர்கால வீதி பராமரிப்பை மேம்படுத்துவதற்கான சட்டமூலம் குறித்து விவாதிக்க, (முஷ்கெகோவுக்- ஜேம்ஸ் பே என்டிபி எம்.பி.பி) கை போர்கோயின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்காக குயின்ஸ் பூங்காவில் கை போர்கோயின் பத்திரிகையாளர் சந்திப்பொன்றையும் நடத்தியுள்ளார்.

வடக்கு ஒன்ராறியோ நெடுஞ்சாலைகளை பாதுகாப்பானதாக்குவது மிக முக்கிமானதொரு விடயம் என்பதனை அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

குளிர்காலத்தில் மோசமாக பராமரிக்கப்படும் வீதிகளில் ஏற்படும் விபத்துக்களினால், பல வடக்கு ஒன்ரோறியர்கள் உயிர்களை இழந்துள்ளதாகவும், வாகனம் ஓட்டுவதில் சாரதிகள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெமிஸ்கேமிங் பிராந்தியத்தில் பதிவுசெய்யப்பட்ட மோட்டார் வாகனங்களைக் கொண்ட ஓட்டுநர்களுக்கு, ரொறான்ரோ பகுதியை விட விபத்து வாய்ப்பு கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.