கனடாவில் துப்பாக்கிச் சூடு – 3 பேர் படுகாயம்

கனடாவில் உள்ள நோர்த் யோர்க் எனுமிடத்தில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இரவு 7 மணியளவில் பிஞ்ச் அவெனியு வெஸ்ற் மற்றும் ஜெய்செல் டிரைவ் ஆகிய இடங்களை இணைக்கும் பகுதியில் இடம்பெற்றுள்ளது

அடையாளம் தெரியாத ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 3 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சம்பவம் தொடர்பாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபரின் அடையாளம் குறித்து எந்த விவரமும் இதுவரை வெளியிடப்படவில்லை.