கார்பன் மொனொக்சைட் வாயுக் கசிந்து 46 பேர் பாதிப்பு

கனடாவில் கார்பன் மொனொக்சைட் (Carbon Monoxide) எனப்படும் நச்சு வாயுக் கசிவினால் பாதிக்கப்பட்ட 46 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 15 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பிரேய்ரி (Prairie) பகுதியில் அமைந்துள்ள Super 8 motel எனப்படும் குடியிருப்பு விடுதியில் வாயுக்கசிவு ஏற்பட்டதாக தீயணைப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி பாதுகாப்பு துறையினரும், தீயணைப்பு படையினரும் நச்சுவாயு வௌியான பகுதியை மீளமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எவ்வாறாயினும், காபன் மொனோக்சைட் வாயு கசிவுக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.