கொவிட்-19: கடந்த 24 மணித்தியாலத்தில் 371பேர் பாதிப்பு

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 371பேர் பாதிப்படைந்ததோடு, 12பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 20ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 6 ஆயிரத்து 805ஆக உயர்ந்துள்ளது. மேலும், 8 ஆயிரத்து 749பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 27,482பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 70,574பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

2,152பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன