முன்னாள் மனைவி மீது தீ மூட்டிய ஆண் – கியூபெக்கில் சம்பவம்

கியூபெக் நகரில் தனது முன்னாள் மனைவி மீது தீ மூட்டிய ஆண் ஒருவரைக் கைது செய்துள்ள பொலிஸார் அவர்மீது கொலை முயற்சி மற்றும் மோசமான தாக்குதல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளனர்.

கியூபெக் நகரில், மொன்றியலில் இருந்து கிழக்கே சுமார் 110 கிலோமீடடர் தொலைவில், ட்ரோமின்வில் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து, 39 வயதான அந்த ஆணை நேற்று (சனிக்கிழமை) கியூபெக் மாநில பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

இதேவேளை தீயினால் எரியுண்ட குறித்த அந்த 27 வயதுப் பெண், முகம், முதுகு மற்றும் கைகளில் பலத்த எரிகாயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கியூபெக் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கியூபெக் நகரின் செயின்ட்-சோவியர் குடியிருப்புப் பகுதி வீடொன்றில் நேற்று இரவு 9 மணியளவில் அவர் தீமூட்டப்பட்ட போது, அவரது இளைய பிள்ளையும் தாயாரும் அதனைக் கண்டதாக தெரிவிக்கப்பட்டதுள்ளது.

மேலும் குறித்த பெண் சிகிச்சைகளுக்காக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அதேவேளை, பிள்ளையும் தாயாரும் அதிர்ச்சிக்கான சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.