கனேடியப் பெண்ணை அமெரிக்காவினுள் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு சிறைத்தண்டனை

கனேடியப் பெண் ஒருவரை அமெரிக்காவினுள் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அமெரிக்கருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென் கரோலினாவைச் சேர்ந்த 41 வயதான ஃபிரட் றூசெல் ஊரே என்பவருக்கு, தற்போது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அல்பேர்ட்டாவைச் சேர்ந்த குறித்த 19 வயது பெண்ணுக்கு, ‘மாடலிங்’ வேலை வாய்ப்பினைப் பெற்றுத்தருவதாக தெரிவித்து கனடாவின் தென்பகுதி எல்லைப் பகுதி ஊடாக அமெரிக்காவினுள் அழைத்துச் சென்ற குறித்த ஆண், அவரையும் கனடாவில் உள்ள அவரது குடும்பத்தையும் தாக்கப் போவதாக பயமுறுத்தி, அந்தப் பெண்ணை ஐந்து நாட்களாக தடுத்து வைத்து அவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படுகின்றது.

இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டஃபிரட் றூசெல் ஊரே மீது, முதல்தர பாலியல் தாக்குதல், போதை ஏற்ற முயன்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.