ஸ்கார்பரோ துப்பாக்கி சூடு – துப்பு துலங்கும் பொலிஸார்

ஸ்கார்பரோவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றினுள் அமர்ந்திருந்த ஆண் ஒருவர் பல தடவைகள் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரம் தொடர்பாக, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திலிருந்து வெள்ளை நிற வாகனம் ஒன்று தப்பித்துச் சென்றதாக மட்டும் தெரிவித்துள்ள பொலிஸார், இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும், அருகிலுள்ள சிசிரிவி பதிவுகளை சேகரித்து, அதன் ஊடாக ஆதாரங்கள் எதுவும் கிடைக்குமா எனவும் தங்களது ஆய்வுகளை தொடங்கியுள்ளனர்.

லோவ்ரன்ஸ் மற்றும் ரஷ்லீ ட்ரைவ் பகுதியில் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) இரவு 11:30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் உயிர் பிழைத்துவிடுவார் என்று நம்பப்படுகிறது.