எட்மன்டனில் விபத்து ஒருவர் உயிரிழப்பு இருவர் காயம்

எட்மன்டனில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.

கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏனைய இருவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.