மூன்று வாகனங்கள் தொடர்புபட்ட வாகன விபத்தில் ஒரு பெண் உயரிழப்பு

ஒன்றாரியோ- தேம்ஸ்ஃபேர்ட் வடகிழக்கில் இடம்பெற்ற மூன்று வாகனங்கள் தொடர்புபட்ட வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அந்த பெண்மணி ஒக்ஸ்பேர்ட் கவுண்டியைச் சேர்ந்தவர் என்று ஒன்ராறியோ மாகாண பொலிஸ் மற்றும் அவசர சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் ஒரு மினி வான், பிக்-அப் ட்ரக் மற்றும் ஒரு டிராக்டர்-டிரெய்லர் ஆகியவை அடங்கும். மினி வானின் சாரதியான 53 வயதான பெண்ணொருவரே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தார்.

பிக்கப் டிரக்கின் வாகனச் சாரதி ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், டிராக்டர்- டிரெய்லரின் சாரதி சிறிய காயங்களுக்கு சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்றுக் கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில், இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முaன்னெடுத்து வருகின்றனர்.