கனடாவின் வடிவிலான நாணயத்தை கனடா அரசு வெளியிடுகின்றது

கனடா தினத்தை கௌரவிக்கும் விதமாக ‘கனடா’ நாட்டின் வடிவிலான நாணயம் ஒன்றை வௌியிட ‘தி றோயல் கனேடியன்’ நாணய சபை தீர்மானித்துள்ளது.

றோயல் கனேடியன் நாணய அச்சக சபையின் தயாரிப்பு முகாமையாளர் எரிகா மாகா இந்த தகவலை வௌியிட்டுள்ளார்.

வடிவமைப்பை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு புதுமையான வடிவத்தை உருவாக்க பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டுக் குழுக்கள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்தன.

அந்த வகையில் கனடாவின் ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு விலங்கை அடையாளப்படுத்தும் வகையில் கலைஞரான அலிஷா கிரோக்ஸின் படைப்பில் உருவான வடிவத்தை இறுதி செய்வதற்கு அச்சக சபையின் அதிகாரிகள் தீர்மானித்தனர்.