மெட்ரோ வன்கூவரில் மழை பெய்யும் சாத்தியம்

பனிப்பொழிவு மூன்று மடங்கிற்கும் மேலாக வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், ஒரு வாரத்திற்குள் மெட்ரோ வன்கூவரில் மழை பெய்யும் என கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், இன்றிரவு மற்றும் நாளை காலையில் இன்னும் கொஞ்சம் பனிப்பொழிவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 5 சென்டிமீட்டர் வரை ஈரமான பனி பெய்யக்கூடும் என சுற்றுச் சூழல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மேற்கு கடற்கரை குளிர்காலத்தில் மிதமான வெப்பநிலையுடன், வேலை வாரத்தில் மழை நன்றாக தொடரும் என்று எதிர்பார்க்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.