கனடாவில் கரடிகள் அட்டகாசம் – நொறுங்கியது காரின் கண்ணாடி

பிரிட்டிஷ் கொலம்பியாவில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியை, கரடியொன்று உடைத்துள்ளது.

வன்கூவரிலுள்ள பெண்ணொருவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதையடுத்து அவர் மனிதனொருவரால் உடைக்கப்பட்டிருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகம் கொண்டிருந்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த காரின் உரிமையாளர், தன்னுடைய வீட்டு சூழலில் கரடி ஒன்று நடமாடியபோதிலும் அப்பகுதியில் கரடிகளின் நடமாட்டம் சாதாரணமானது என்றபடியால் தான் ஆச்சரியப்படவில்லை என்றும், பின்னர் சி.சி.டி.வி. கமெராக்களை சோதனையிட்ட போது, கரடியொன்று காரின் கண்ணாடியை உடைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.