காணாமல் போன சிறுமியைத் தேட பொலிஸாருடன் கைகோர்த்த பொதுமக்கள்

கனடாவின் ரொறொன்ரோவில் பத்து வயதுச் சிறுமி ஒருவர் காணாமல் போனதாக பொலிஸார் அறிவித்திருந்த நிலையில் அவர் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

ரொறொன்ரோ பொலிஸார் கடந்த 17 ஆம் திகதி ருவிற்றரில் வெளியிட்ட பதிவில் ஜிசெல் பன்ஷன் லொய்ஷா (Jiselle Banchon-Loayza) என்ற பத்து வயதுச் சிறுமி காணாமல் போயுள்ளதாக அவரின் ஒளிப்படத்துடன் பதிவிட்டனர்.

குறித்த சிறுமி அணிந்திருந்த உடையின் நிறம், அவர் தலைமுடியின் நிறம் மற்றும் கண்ணாடி குறித்த தகவல்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேவேளை, சிறுமி குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அது குறித்துத் தெரிவிக்கலாம் என ஒரு தொலைபேசி இலக்கத்தையும் பொலிஸார் வெளியிட்டனர்.

குறித்த பதிவை சமூகவலைத்தளங்களில் அதிகமானவர்கள் பகிர்ந்தனர். இந்தநிலையில் சிறுமி ஜிசெல் கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்தத் தகவலை ரொறொன்ரோ பொலிஸார் தமது டுவிட்டர் பக்கத்தில் சிறுமி பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் கடவுளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளனர்.