பிராண்ட்ஃபோர்ட்டில் அதிகமாகும் ஒபியாய்ட் பாவனை

பிராண்ட்ஃபோர்ட்டில், 2020ஆம் ஆண்டின் முதல் 12 நாட்களில் 17 அளவுக்கு அதிகமான ஒபியாய்ட்டை எடுத்துக் கொண்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பிராண்ட்ஃபோர்ட் பொது சுகாதார பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் நான்கு அபாயகரமான அளவுகள் அடங்குவதாகவும், இவை அனைத்தும் ஜனவரி 10ஆம் திகதி பிராண்ட்ஃபோர்டில் நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சராசரியாக மாதத்திற்கு 13 அதிகப்படியான சம்பவங்களுடன் ஒப்பிடும்போது நிச்சயமாக, அதிகப்படியான ஒபியாய்ட் சம்பவங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.