கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக புரண்ட வாகனம்

ஒன்றாரியோவின் கொட்டேஜ் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், ஒருவர் உயிரிழந்ததோடு, மூவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெடுஞ்சாலை 11 அருகில் கிரேன்ஹர்ஸ்ட் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த வாகனத்தில் பயணித்த நால்வரில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் ரொறன்ரோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளனர். மற்றொருவர் பெரிய காயங்களுக்கு உள்ளாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்து வேக கட்டுப்பாட்டை இழந்ததே இவ்விபத்திற்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் இன்னமும் வெளியிடவில்லை.