ரெக்ஸ்டேல் பகுதியில் துப்பாக்கிச் சூடு

ரெக்ஸ்டேல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மார்ட்டின் கிரோவ் சாலை மற்றும் ஜோன் கார்டன் பவுல்வர்ட் பகுதியில், நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துக்கு உள்ளான குறித்த பெண் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எவையும் வெளியிடப்படாத நிலையில், அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.