கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 50ஆயிரத்தைக் கடந்தது

கனடாவில் கொரோனா தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 50ஆயிரத்தை கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, கனடாவில் ஒரு இலட்சத்து 50ஆயிரத்து 456பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆயிரத்து 362பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 6பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 9ஆயிரத்து 255பேர் உயிரிழந்துள்ளனர்.

11ஆயிரத்து 628பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 29ஆயிரத்து 573பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் 97பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.