கனேடிய பாராளுமன்ற வளாகத்தினுடைய பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது

ஓட்டவாவிலுள்ள கனேடிய பாராளுமன்றம் அமைந்திருக்கின்ற பகுதிகளில் அரசியல்வாதிகளையும், மற்றவர்களையும் குறிவைத்து பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக பாராளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த விசேட புலனாய்வு தகவல்கள் காரணமாக இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோவில் , என்.டி.பி தலைவர் கைது செய்யப்பட வேண்டுமா? என்று கேட்கும் ஒருவரால் புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் பாராளுமன்ற கட்டிட தொகுதி அமைந்திருக்கின்ற பகுதிக்கு முன்னால் ஜக்மீத் சிங்கை தெருவில் ஒருவர் பின் தொடர்ந்ததாகவும் . பின்னர் அந்த நபர் ஜக்மீத் சிங்கிடம் அடுத்த முறை ஒருவரை ஒருவர் பார்க்கும்போது, ​​இருவரும் “நடனமாடுவோம் ” என்று தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த என்டிபி தகவல் தொடர்பு இயக்குநர் ஜார்ஜ் சோல் அவர்கள் “நாங்கள் இந்த சம்பவத்தை பாராளுமன்ற பாதுகாப்பு சேவைக்கு அறிவித்தோம்” என்று தெரிவித்தார்

.ரோயல் கனேடிய மவுண்டட் காவல்துறையின் எல்லைக்குட்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தொகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பாராளுமன்ற வளாகத்திற்கு பாதுகாப்பு வழங்கும் பாதுகாப்பு சேவை என்பன இது தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஆர்.சி.எம்.பி.யின் தரவுகளின்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன என்று ஊடகம் ஒன்று கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்.சி.எம்.பியின் 2019ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை, பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாக 100 விசாரணைகளைஆரம்பித்திருந்தாகவும், அதே சமயம் 2020 ஜனவரி முதல் ஜூலை வரை சுமார் 130 விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.