கனடாவில் கொவிட்-19 உயிரிழப்பு வீதம் குறைந்து வருகின்றது!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால் 218பேர் பாதிப்படைந்ததோடு, 6பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய கடந்த மூன்று தினங்களாகவே ஒற்றை இலக்க உயிரிழப்பே கனடாவில் பதிவாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 1 இலட்சத்து 3,250பேர் பாதிப்படைந்ததோடு, 8,522பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், 28,537பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 66,191பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 2,090பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.