கொவிட்-19: எட்மண்டனில் உள்ள பராமரிப்பு மையத்தில் ஐந்து பேர் உயிரிழப்பு!

எட்மண்டனில் உள்ள குட் சமாரியன் சவுத்கேட் பராமரிப்பு மையத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், குறித்த பராமரிப்பு மையத்தில் தற்போது 70 பேர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அல்பர்ட்டாவில் நேற்று (வியாழக்கிழமை) மேலும் ஐந்து கொவிட்-19 இறப்புகள் மற்றும் 113 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதன்மூலம் உயிரிழப்பின் எண்ணிக்கை 195ஆக உயர்ந்துள்ளது. செயலில் உள்ள பாதிப்புகள் 1,408ஆக உள்ளன.

அல்பர்ட்டா சுகாதாரச் சேவை, கடந்த 24 மணி நேரத்தில் 8,700க்கும் மேற்பட்ட சோதனைகளை நடத்தியது. மார்ச் முதல் 675,000க்கும் மேற்பட்ட சோதனைகளை அது நடத்தியது.