வின்ட்சரில் உள்ள பாடசாலையில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய இருவர் கைது

தெற்கு வின்ட்சரில் உள்ள பாடசாலை வளாகத்திற்கு துப்பாக்கிகளைக் கொண்டு வந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வின்சென்ட் மாஸ்ஸி மேல்நிலை பாடசாலையிலேயே நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதன்போது, குறித்த இருவரும் பாடசாலை அதிகாரிகளை அச்சுறுத்தியதாகவும், இதன்பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட போது, அவ்விருவரும் அவ்விடத்தை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அவர்களை கைதுசெய்ய தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்த பொலிஸார், ஒரு வீட்டிலிருந்து இவ்விருரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிராம்ப்டனைச் சேர்ந்த 18 வயது இளைஞன் எனவும், மற்றொருவர் விண்ட்சரைச் சேர்ந்த 18 வயது இளைஞன் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது பிராம்ப்டனை சேர்ந்தவர் மீது துப்பாக்கி தொடர்பான 11 குற்றச்சாட்டுகள் மற்றும் கடத்தல் நோக்கத்திற்காக கட்டுப்படுத்தப்பட்ட பொருளை வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதேபோல, துப்பாக்கிகள் முன்னிலையில் மோட்டார் வாகனத்தை ஆக்கிரமித்ததாக விண்ட்சர் இளைஞன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.