கென்ட்டிவல் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து

கனடா – கென்ட்டிவல், என்.எஸ்., நகரப் பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஆறு பேர் தற்காலிகமாக வீடற்ற நிலையில் உள்ளனர்.  நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்ற தீ விபத்தில் மாடிக் குடியிருப்பின் ஒரு பகுதி தீக்கிரையானது.

கண்காட்சி கூட வீதியில் உள்ள இரண்டு மாடி குடியிருப்பில் நேற்றிரவு 7 மணியளவில் தீ விபத்து இடம்பெற்றதாக கனேடிய செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளார்.

தீயினால் கட்டிடத்தின் ஒரு தொகுதி பரவலாக சேதமடைந்துள்ளதாகவும், கட்டிடம் முழுவதும் புகை பரவியதால் அங்கிருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற பாதிப்பு ஏற்பட்டதாகவும் செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, குறித்த கட்டிடத்தில் இருந்து வௌியேறி தற்காலிக தங்குமிடங்களில் உள்ளவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மனிதாபிமான அமைப்பினர் விநியோகித்துள்ளனர்.

மற்றைய அடுக்குமாடி குடியிருப்புகளின் மூன்று குத்தகைதாரர்கள் தற்காலிக தங்குமிடத்திற்கு தங்களின் உடமைகளை மாற்றிக் கொண்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.