டொரியன் புயல் தாக்கத்தால் கிழக்கு கனடாவில் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன

பஹாமாஸில் ஆரம்பித்து அட்லாண்டிக் பிராந்திய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய டொரியன் புயல் கனடாவையும் பதம் பார்த்தது.

இதன்காரணமாக, அங்கு பல்லாயிரக்கணக்கான வீடுகள் தொடர்ந்தும் மின்சார வசதியின்றி இருளில் மூழ்கியுள்ளன.

மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அனைத்து பொதுப் பாடசாலைகள் உட்பட நிறுவனங்களும் செயலிழந்துள்ளன.

சக்திவாய்ந்த டொரியன் புயலுக்கு பின்னர், நோவா ஸ்கோடியா முழுவதும் மரங்கள் முறிந்து வீழ்ந்த பல சம்பவங்கள் பதிவாகியுள்ன.

எவ்வாறாயினும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை சரிசெய்வதற்கான குழுக்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.