சாஸ்கடூன் கத்திக் குத்து – சந்தேகநபர்கள் இருவருக்கு பொலிஸார் வலைவீச்சு

சாஸ்கடூனில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவம் தொடர்பாக, சந்தேகநபர்கள் இருவருரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குறித்த இரு சந்தேக நபர்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ள பொலிஸார், இவர்கள் இருவரும் இருபது வயதுக்குட்பட்டவர்களாக இருக்ககூடுமென சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஒருவர் கருப்பு காற்சட்டை, வெள்ளை ரன்னர்ஸ் மற்றும் சாம்பல் நிற ஜாக்கெட் கொண்ட சிவப்பு ஸ்வெட்டர் அணிந்திருந்ததாகவும், இரண்டாவது சந்தேக நபர் கருப்பு நிற ஆடையில் வெள்ளை நிற கோடுகளுடன் கருப்பு நிற பையை சுமந்தவாறும் இருந்ததாக பொலிஸார் விபரித்துள்ளனர்.

நேற்று முன் தினம் (புதன்கிழமை) 25 வீதி ஈ மற்றும் 2ஆவது அவென்யூ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

3ஆவது மற்றும் 4ஆவது அவென்யூக்களுக்கு இடையில், 26வது வீதிப் பகுதியில் 44 வயதான ஒருவர் பல கத்திக் குத்து காயங்களுடன் மீட்கப்பட்டு, உயிராபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை உடனடியாக தொடர்புக் கொள்ளுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.