அஜாக்ஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

அஜாக்ஸ் பகுதியில் ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெய்லி தெருவின் கிழக்கு மற்றும் ஹாவுட் அவனியூ தெற்கு பகுதியில், ஃபால்பி கோர்ட் இல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து அந்த பகுதிக்குச் சென்றிருந்த பொலிஸார் அந்த இடத்தில் ஆண் ஒருவர் உயிராபத்தான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டதாகவும் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இந்தச் சம்பவம் தொடர்பில் டர்ஹாம் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். எனினும் சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை.