அனுபவம் வாய்ந்த விமானிகளை இழந்துவரும் கனேடிய விமானப்படை

பல அனுபவம் வாய்ந்த விமானிகளை கனேடிய விமானப் படை இழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னிருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் தற்போது அனுபவம் குறைந்த விமானிகளே விமானப் படையில் காணப்படுவதாக விமானப் படையின் கட்டளைத்தளபதி தெரிவித்துள்ளார்.

கனேடிய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இதனை வெளிப்படுத்தி உள்ளார்.

விமானப் படையிலுள்ளவர்கள் வர்த்தக ரீதியலான பணிகளை நாடிச் செல்வதே இதற்கு முக்கிய காரணமாக விளங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இப்பிரச்சினை எதிர்வரும் சில வருடங்களுக்குள் நிவர்த்தி செய்யப்படும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.