ஸ்கார்பாரோவில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு- இருவர் படுகாயம்

ஸ்கார்பாரோவில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து கடந்த வெள்ளிக்கிழமை மாலை சுமார் 1:30 மணியளவில் மெக்னிகோல் அவென்யூவில் சம்பவித்துள்ளது.

குறித்த கார், தனது வேகக்கட்டுபாட்டை இழந்ததில் எதிரே உள்ள மின் கம்பத்தின் மீது மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இவ்விபத்தில் உயிரிழந்தவர் 16 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இருவர் அண்மையில் உள்ள மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்விபத்து குறித்து பொலிஸார், தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.