ஹமில்டன் வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஹமில்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு வாகனம் தொடர்புபட்ட இந்த விபத்து பிளம்பேர்க்கில் உள்ள வூட்கில் வீதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பாக மேலதிக விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை.

இந்த விபத்தினை அடுத்து சம்பவ இடத்தின் ஊடான போக்குவரத்துகளைத் தடைசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.