கியூபெக்கில் மதுபானசாலைகள் மற்றும் இரவு விடுதிகளில் நள்ளிரவுக்குப் பின் மது விற்பனை செய்ய தடை

கியூபெக்கில் மதுபானசாலைகள் மற்றும் இரவு விடுதிகளில் நள்ளிரவுக்குப் பிறகு, மது விற்பனை செய்வதற்கு மாகாண அரசு தடைவிதித்துள்ளது.

மேலும் அவை சட்டப்பூர்வ வாடிக்கையாளர் திறனில் 50 சதவீதமாக வரையறுக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் அதிகாலை 1 மணிக்குள் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும்.

இதுதவிர, இவை வழக்கத்தை விட முன்னதாகவே மூடப்படும் மற்றும் புரவலர்கள் நடனமாட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை மாகாண அரசு எடுத்துள்ளது.