கியூபெக்கில் 5ஆம் வகுப்பு- அதற்கு மேற்பட்ட மாணவர்கள் பொதுவான பகுதிகளில் முகக்கவசம் அணிய உத்தரவு

கியூபெக்கில் மாணவர்கள் பாடசாலைக்கு திரும்பும் போது, 5ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்கள் பொதுவான பகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என கியூபெக் கல்வி அமைச்சர் ஜீன்-ஃபிராங்கோயிஸ் ராபர்ட் தெரிவித்துள்ளார்.

மாகாணத்தில் மாணவர்கள் பாடசாலைக்கு திரும்புவதற்கான திட்டத்தின் புதுப்பிப்பை வழங்கிய போது அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

5ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு உயர் கல்வி உட்பட முகக்கவசங்கள் கட்டாயமாக இருக்கும்.

முகக்கவசங்களை பாடசாலைகள் பேருந்துகள் மற்றும் பொதுவான பகுதிகளில் அணிய வேண்டும். ஆனால் வகுப்பறையில் அல்ல.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முகக்கவசங்களை வழங்க வேண்டும். இல்லாவிடின் ஆசிரியர்கள் அவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்குவார்கள். முகக்கவசங்களைப் பெற நிதி உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு சமூக நிறுவனங்கள் உதவும்.