கனடா-அமெரிக்க எல்லையை அடுத்த ஆண்டுவரை மூடுமாறு எல்லை நகர மேயர்களின் குழு கோரிக்கை

கனடா- அமெரிக்க எல்லையை குறைந்தபட்சம் அடுத்த ஆண்டு வரை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மூடி வைக்குமாறு, எல்லை நகர மேயர்களின் குழு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த குழு கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயருடன் இணைய காணொளி மாநாட்டின் போது, இந்த கோரிக்கையை முன்வைத்தது.

கூட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த சர்னியா மேயர் மைக் பிராட்லி, மூடுதலை நீட்டிப்பது மிகவும் விவேகமான பாதை என்று கூறினார்.

இன்னும் கூட, முன்கூட்டியே மீண்டும் திறப்பது மாகாணத்தை மேலும் பின்னுக்குத் தள்ளக்கூடும் என்று பிராட்லி தெரிவித்தார்.

தற்போதைய நிலவரப்படி, அத்தியாவசியமற்ற எல்லை தாண்டிய பயணத் தடை செப்டம்பர் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.