கனடாவில் கத்திக்குத்து – ஒருவர் காயம்

கனடாவில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கனடாவின் பிரம்ப்டன் பகுதியில் நேற்று(வியாழக்கிழமை) இரவு இந்த கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கத்திக்குத்து தாக்குதலில் 19 வயதான இளைஞன் ஒருவனே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த இளைஞன் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கனடாவில் அண்மைக்காலமாக இவ்வாறான கத்திக்குத்து தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.